ஷா அலாம், பிப் 16 – குழு ரீதியிலான ஆசிய பேட்மிண்டன் போட்டியில் மலேசிய ஆண்கள் குழுவினர் 3 -2 என்ற ஆட்டக் கணக்கில் ஜப்பான் குழுவை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.
மலேசிய குழுவினர் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரிய அணியை சந்திக்கின்றனர். இதனிடையே அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றதன் மூலம் பேங்காங்கில் நடைபெறவிருக்கும் Thomas கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கும் மலேசிய குழுவினர் தேர்வு பெற்றனர்.