Latestமலேசியா

ஆசிய பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டி காலிறுதியாட்டத்திற்கு லீ ஷி ஜியா தேர்வு

கோலாலம்பூர், ஏப் 29 – மணிலாவில் நடைபெற்றுவரும் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒன்றையர் பிரிவுக்கான காலிறுதியாட்டத்திற்கு மலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் விளையாட்டாளரான Lee Zii Jia தேர்வு பெற்றார். அவர் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேசியாவின்
Shesar Hiren Rhustavito வை 21 -14, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இன்று நடைபெறும் ஆட்டத்தில் லீ ஷி ஜியா ஜப்பானின் Kanta Tsuneyama வுடன் மோதுவார். இதனிடையே மகளிர் பிரிவில் மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஜோடியான Pearly Tan – M. Thinah ஜோடி 21 -13. 23-21 என்ற புள்ளிக் கணக்கில் Hongkong கின் Yeung Nga – Yeung Pui Lam ஜோடியை வீழ்த்தியதன் மூலம் காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!