Latestமலேசியா

ஆசியாவில் வலுவான மதிப்பை கொண்டிருந்த ரிங்கிட், 14-வது பொதுத் தேர்தலுக்கு பின் தொடர் சரிவை எதிர்நோக்கியுள்ளது ; கூறுகிறார் நஜிப்

கோலாலம்பூர், பிப்ரவரி 28 – 2017-ஆம் ஆண்டு, ஆசியாவின் வலுவான சிறந்த நாணயமாக ரிங்கிட் இருந்தது எனவும், நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் வரை அந்நிலை தொடர்ந்தது எனவும், டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.

எனினும், நாட்டின் 14-வது பொதுத் தேர்தலுக்கு பின், “யூ-டர்ன்” செய்த ரிங்கிட்டின் மதிப்பு, இதுவரை தொடர்ந்து சரிவை எதிர்நோக்கி வருகிறது.

தனது முகநூல் பதிவு வாயிலாக அதனை தெரிவித்துள்ள நஜிப், இரு “ஸ்கிரீன் ஷாட்டுகளையும்” அந்த பதிவோடு இணைத்துள்ளார்.

1MDB ஊழலே பணவீழ்ச்சிக்கு காரணம் என குற்றம்சாட்டுவதை நிறுத்துமாறு, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முஹமட் புவாட் சர்காஷி, பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியை கேட்டுக் கொள்ளும் செய்தியும், 2017-ஆம் ஆண்டு ஆசியாவின் வலிமையான நாணயமாக ரிங்கிட் இருந்ததை குறிக்கும் ப்ளூம்பர்க் அறிக்கையும் அந்த இரு ஸ்கிரீன் ஷாட்டுகளில்” இடம் பெற்றுள்ளன.

நாட்டின் 14-வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் தொடங்கி, ரிங்கிட்டின் மதிப்பு தொடர் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக, அந்த முன்னால் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

2017-ஆம் ஆண்டு வரையில், ஆசியாவின் வலுமான கரன்சியாக இருந்த ரிங்கிட்டின் சரிவுக்கு, மற்றவரை குறை கூறுவது தான், நமக்கு தெரிந்த எளிதான வழி எனவும் நஜிப் பதிவிட்டுள்ளார்.

2017-ஆம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.0620-ஆக பதிவுச் செய்யப்பட்டது.

எனினும், அண்மைய சில நாட்களாக அது வரலாறு காணாத சரிவை பதிவுச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!