Latestமலேசியாவிளையாட்டு
ஆசிய மகளிர் பேட்மிண்டன் போட்டி; ஜப்பானை வீழ்த்தியது மலேசியா
கோலாலம்பூர், பிப் 16 – ஆசிய மகளிர் குழு பேட்மிண்டன் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் மலேசிய குழுவினர் 3-2 என்ற ஆட்டக் கணக்கில் ஜப்பான் அணியை வென்றனர்.
முதல் ஒற்றையர் ஆட்டத்தில் S.Kishona வும் இரண்டாவது ஒற்றையர் ஆடடத்தில் Eoon xi Quan னும் தோல்வி கண்டதால் ஜப்பான் 2 – 0 என்ற புள்ளிகளில் முன்னணியில் இருந்தது.
எனினும் மூன்றாவது ஒன்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் Siti Nurshuhaini Azman 21-16, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் Japan னின் Hina Akechi யை வென்றார்.
அதன் பின்னர் அடுத்த இரண்டு இரட்டையர் ஆட்டங்களிலும் மலேசிய ஜோடி ஜப்பானிய குழுவினரை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தினர்.