Latestஉலகம்சிங்கப்பூர்விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் சிங்கப்பூரின் சாந்தி பிரைரா தங்கம் வென்றார்

ஹங்ஷோவ், அக் 3 – ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் சிங்கப்பூரின் ஹாங்சோ தங்கப் பதக்கம் வென்றார். 49 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய போட்டியில் ஓட்டப்பந்த பிரிவில் சிங்கப்பூருக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். 200 மீட்டர் ஓட்டத்தை 23.03 வினாடியில் ஹாங்சோ ஓடி முடித்தார். இரண்டாவது இடத்தை பெற்று சீனாவின் லி யூட்டிங் வெள்ளிப் பதக்கத்தையும், நடப்பு வெற்றியாளரான எடிடிஆங் ஒபினோமே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். 27 வயதுடைய ஹாங்சோ சனிக்கிழமை நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். ஆகக் கடைசியாக 1974 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் சிங்கப்பூர் முதல் தங்கப் பதக்கம் வென்றது.