Latestமலேசியா

ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியில் பதக்கம் பெறுவோம் -பயிற்சியாளர் அருள் செல்வராஜ் நம்பிக்கை

கோலாலம்பூர், செப் 17 – இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதிவரை சீனாவின் Hangzhou வில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசிய ஆடவர் ஹாக்கி அணி கடுமையான சவாலை எதிர்நோக்கிய போதிலும் பதக்கம் பெறமுடியும் என தேசிய ஹாக்கி குழுவின் பயிற்சியாளர் அருள் செல்வராஜ் தெரிவித்திருக்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பிரிவில் இந்தோனேசியா, தாய்லாந்து ,ஓமன், சீனா தென் கொரியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இப்பிரிவில் மலேசியா முதல் இடத்தை பெற்றால் அரையிறுதி ஆட்டத்தில் சக்திவாய்ந்த இந்தியாவுடன் மோதுவதை தவிர்க்க முடியும். A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர், வங்காளதேசம், உஸ்பெகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன

ஸ்பீடி டைகர்ஸ் எனப்படும் மலேசிய ஹாக்கிக் குழு தற்போது உலக தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளது. கொரியாவை விட இரண்டு படிகள் முன்னேறி உள்ளது. நாங்கள் எங்கள் குழுவில் முதலிடத்திற்கு முன்னேறுவோம். நாக்-அவுட் முறையிலான முன்னோடி சுற்று ஆட்டங்களில் எந்த அணியையும் முறியடிக்க முடியும் என உறுதியோடு இருக்கிறோம் என அருள் செல்வராஜ் கூறினார். Hongzhou வில் தங்கம் வெல்வதே எங்கள் ஒரே நோக்கம். அந்த முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெறமுடியும் என அருள் செல்வராஜ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!