
சென்னை , ஏப் 25 – ஆசிய சாம்பியன்ஷீப் கிண்ணத்திற்கான ஹாக்கிப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிவரை சென்னை மேயர் ராதகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அந்த போட்டியில் மலேசியா, நடப்பு சாம்பியனான தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான் , சீனா , ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தியாவுடனான நட்புறவு சீராக இல்லாததால் இப்போட்டியில் சீனா மற்றும் இந்திய அணிகள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அந்த இரண்டு நாடுகளும் இப்போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.