Latestமலேசியா

ஆசிரியரின் பேச்சைக் கண்டித்து காணொலி வெளியிட்ட மாணவிக்கு எச்சரிக்கை கடிதம்

கோலாலம்பூர்,மே 9- பாட நேரத்தின் போது, தனது ஆசிரியர்  பாலியல் வன்முறை தொடர்பில் கிண்டலாக  பேசியதாக, காணொலியை வெளியிட்டு, பலரது ஆதரவைப் பெற்ற  ஐந்தாம் படிவ மாணவி அய்ன் ஹுஸ்னிசா சய்ஃபூல் நீசாமிற்கு எதிராக ,அவரது பள்ளிக்கூடம் எச்சரிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கு வரவில்லை எனக் கூறி அவருக்கு, பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை கடிதத்தை வழங்கியுள்ளது.

ஏப்ரல் 28 -ஆம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில், பள்ளிக்கு வராததற்கான் காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால் ,  அய்ன் பள்ளியிலிருந்து நீக்கப்படலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கு  செல்வதை தனது மகள் பாதுகாப்பாக உணரவில்லை என அய்னின் தந்தை, ஏற்கனவே பள்ளிக்கூட தலைமையாசிரியரிடம் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு கூறியிருந்தும் மே நான்காம் தேதி, Pos Laju-வின் வாயிலாக , பள்ளி நிர்வாகத்திடமிருந்து எச்சரிக்கை கடிதத்தைப் பெற்றிருப்பதாக, அய்னின் தந்தை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!