
ஜகார்த்தா, ஆக 29 – பெண்களுக்கான hijab தலை முக்காடுகளை தவறாக அணிந்ததைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் முக்கிய தீவில் உள்ள பள்ளியைச் சேர்ந்த 14 மாணவிகளின் தலையில் மொட்டை அடிக்கப்பட்டதாக பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்தார். 270 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தோனேசிசியாவில் முஸ்லிம் பெண்களும் முஸ்லிம் அல்லாத பெண்களும் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்பது பல ஆண்டு காலமாக கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கட்டாய உடை நெறிமுறைகளை பின்பற்றத் தவறினால் மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு 2021 ஆம் ஆண்டு முதல் அங்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு ஜாவாவிலுள்ள Lamongan நகரிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான Junior உயர்நிலைப் பள்ளியில் கடந்த புதன்கிழமை 14 மாணவிகளின் தலையில் அடையாளம் தெரியாத ஆசிரியை மொட்டை அடித்துள்ளதாக அந்த பள்ளியின் தலைமையாசிரியர் Harto தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்காக பள்ளி மன்னிப்பு கேட்டுக்கொள்வதோடு மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் Harto கூறினார்.