![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/MixCollage-04-Oct-2024-03-21-PM-6305.jpg)
புத்ராஜெயா, அக்டோபர் 4 – அரசு ஊழியர்களில், ஆசிரியர்களே பெரும்பாலோர் போலியான மருத்துவச் சான்றிதழ்களான MC வழங்குவதாகக் கூறுவது பொறுப்பற்றது.
இத்தகைய கூற்று, ஆசிரியர் தொழிலுக்கு எதிர்மறையான தோற்றத்தை உருவாக்குகிறது எனக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் சாடியுள்ளார்.
அரசு ஊழியர்களின் ஒழுங்குப் பிரச்சனைகளை கையாள்வதற்கான தெளிவான விதிகளைக் கல்வி அமைச்சும் கொண்டுள்ளது.
ஒவ்வொரு நிலையிலும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 400,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்கள் பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர்களின் பங்களிப்புக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பிரதமரும் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அறிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.