தெலுங்கானா , மார்ச் 8 – தெலுங்கானாவில், தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படிக்கும் Anil Naik என்ற சிறுவன் ஒருவன் தன்னை ஆசிரியர்கள் அடிப்பதாகக் கூறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளான்.
அந்த பள்ளிக்கு அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு Anil தனியாகச் சென்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதேவியிடம் இந்த புகாரை செய்துள்ளான். Bayyaram பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகியோர் தன்னை அடிக்கடி அடிப்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என Anil கோரிக்கை விடுத்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதேவி சம்பந்ததப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறினார்.