
இந்தோனேசியா, ஆச்சே மாநிலத்தில், விவசாயிகளை தாக்கி வந்ததாக நம்பப்படும், புலி ஒன்று, ஒரு நாள் தேடுதல் வேட்டைக்கு பின் பிடிப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி குறைந்தது நால்வர் கடுமையாக காயமடைந்தனர்.
எனினும், தற்போது பிடிப்பட்ட புலியும், அந்த தாக்குதல்களை மேற்கொண்ட புலியும் ஒன்றா என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
அந்த புலியின் நடமாட்டம் இருந்தாக நம்பப்படும் காட்டுப் பகுதியில், வனவிலங்கு துறை அதிகாரிகள் அமைத்திருந்த பொறியில் புலி சிக்கியதாக கூறப்படுகிறது.
முகத்தில் காயத்துடன் அந்த புலி கூட்டில் அடைப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.