Latestமலேசியா

ஆச்சேவில் நிலநடுக்கம்; பினாங்கில் அதிர்வு உணரப்பட்டது

ஜோர்ஜ் டவுன், செப் 24 – இந்தோனேசியாவில் ஆச்சே மாநிலத்தில் ரெக்டர் கருவியில் 6,4 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என பேரிடர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே ஆச்சேவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அதிர்வு இன்று விடியற்காலை 5 மணியளவில் பினாங்கு தீவில் உயரமான கட்டிடங்களிலும் உணரப்பட்டது. பினாங்கிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில், மேற்கு சுமாத்திராவின் ஆச்சேவிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் கடற் படுகையில் அந்த நில நடுக்கம உலுக்கியது. மலேசிய நேரப்படி விடியற்காலை மணி 4.52 அளவில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தமது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த கை தொலைபேசி நகர்வதை உணர்ந்ததாக Pulau Tikus அடுக்ககத்தின் ஏழாவது மாடியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகளில் ஒருவரான JY Shen தெரிவித்தார். அப்போது தமது படுக்கையும் ஆடியதை உணர முடிந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!