கோலாலம்பூர், பிப் 10 – கோலாலம்பூர் , Jalan U -Thant னில் ஆடம்பர பங்களா வீடு ஒன்று இணையத்தள சூதாட்ட மையமாக செயல்பட்டு வந்துள்ளதை போலீசார் முறியடித்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது உள்நாட்டைச் சேர்ந்த 33 ஆடவர்களுடன் இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்கு 20,000 ரிங்கிட் வாடகைக்கு எடுக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக இணைய சூதாட்ட நடவடிக்கைக்காக அந்த ஆடம்பர பங்களா செயல்பட்டு வந்துள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 42 கணினிகள் , 256 கை தொலைபேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சூதாட்டம், குண்டர் கும்பல் மற்றும் விபச்சார துடைத்தொழிப்பு பிரிவுக்கான புக்கிட் அமான் விசாரணை பிரிவின் உதவி இயக்குனர் Mohamad Noor Yusof Ali தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close