லண்டன், பிப் 15- மற்ற தம்பதியரைக் காட்டிலும் ஆடம்பரத் திருமணம் செய்துகொள்பவர்கள் விரைவில் மணவிலக்கு பெற்றுக்கொள்வதாகக் கூறும் அதிர்ச்சித் தகவல் ஒன்று பிரிட்டனில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Marriage Foundation என்ற இயக்கம் மேற்கொண்ட அந்த ஆய்வில் கிட்டதட்ட 10 விழுக்காடு மணமுறிவுகள் ஆடம்பரத் திருமணங்களால் நிகழ்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக விரயம் செய்து ஆடம்பரமாக திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான தம்பதிகள் கடனுடன் வாழ்க்கையைத் தொடங்குவதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி விவாகரத்தைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வாளர்கள் கருத்துரைத்தனர்.