Latestஇந்தியா

அயோத்தி ராமர் கோவில் வடிவில் நெக்லஸ்; 5,000 அமெரிக்க வைரக் கற்களால் உருவானது

புதுடெல்லி, டிச 20 – அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்ற வேளையில், இக்கோயிலின் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி கௌசிக் ககாடியா என்பவர் ராமர் கோவிலுக்கு வைர நெக்லஸ்ஸைப் பரிசாகக் கொடுக்கத் தயார் செய்துள்ளார்.

5000க்கும் அதிகமான அமெரிக்க வைரங்களால் 2 கிலோகிராமில் ராமர் கோவில் வடிவத்தில் இந்நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

35 நாட்களில் 40 நகை வடிவமைப்பாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர். இது விற்பனைக்காக உருவாக்கப்படவில்லை, ராமர் கோவிலுக்குப் பரிசாக வழங்குவதற்கு என கூறியிருக்கின்றார் கௌசிக்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!