Latest

ஆடம்பர அடுக்ககங்களில் போதைப் பொருளை பதுக்கும் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர். அக் 23 – ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு போதைப் பொருளை பதுக்கி வைக்கும் கும்பலை போலீசார் முறியடித்தனர். Kajang மற்றும் Bangi யிலுள்ள இரண்டு ஆடம்பர அடுக்குமாடி வீடுகளிலும் Sri Kembangan னிலுள்ள இரண்டு மாடி வீடு ஒன்றிலும் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 11 லட்சத்து 70,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் Yong Lei Choo கூறினார். அந்த கும்பலைச் சேர்ந்த 31 வயதுடைய ஆடவனும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமிருந்து 60,000 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. சீன தேயிலை பிளாஸ்டிக் பொட்டலங்களில் ஷாபு மற்றும் ஹரோய்ன் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக Young Lei Choo தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!