லிஸ்பன், மார்ச் 2 – ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த கார்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றிய இரு வாரங்களுக்குப் பின்னர் போர்த்துகலின் அசோர்ஸ் (Azores ) தீவுக்கூட்டத்தின் நீர்ப் பகுதியில் மூழ்கியது.
Felicty Ace எனப்படும் அந்த கப்பல் Porsche, Bentley போன்ற 4,000 விலையுயர்ந்த கார்ளை ஏற்றிக் கொண்டு, ஜெர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள Rhode தீவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
அந்த கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் காப்பாற்றப்பட்ட வேளை, தீயில் அழிந்த தனது கார்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு இருப்பதாக Volkswagen நிறுவனம் கூறியுள்ளது.