
கோலாலம்பூர், மார்ச் 14, உத்தேச ஆடம்பர வரிகள் தொடர்பான பல்வேறு அம்சங்களை அமைச்சு இன்னமும் மறுஆய்வு செய்து வருவதோடு அந்த வரி தொடர்பான விவரங்களை எதிர்வரும் ஜூன் மாதம் அரசாங்கம் அறிவிக்கும் என நிதித்துறை துணையமைச்சர் Ahmad Mazlan தெரிவித்திருக்கிறார். விவரங்களை மெருக்கெற்றுவதற்கான நடவடிக்கையில் இப்போது அமைச்சு ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். ஆடம்பர வரியில் சேர்த்துக்கொள்ளப்படும் பொருட்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரியை எப்போது அமல்படுத்துவது மற்றும் விதிக்கப்படும் வரி விகிதம் போன்ற விவரங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து பேசியபோது Ahmad Mazlan நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.