Latestமலேசியா

ஆடம்பர வீட்டில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் கும்பல் முறியடிப்பு 13 பேர் கைது

காஜாங் , ஏப்- 29 – Semenyihயில்  வீடமைப்பு பகுதியிலுள்ள   ஆடம்பர வீடு ஒன்றில்  செயல்பட்ட போதைப் பொருள்  தயாரிப்பு கிடங்கில்  அதிரடி சோதனை  நடத்திய  போலீசார்   1.48 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையே 300 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.  காஜாங்  மற்றும் கோலாலம்பூரில்  வெள்ளிக்கிழமையன்று நடத்திய மூன்று  சோதனைகளில்    21 மற்றும்   51 வயதுக்கிடையிலான எட்டு ஆடவர்கள் மற்றும்  ஐந்து பெண்கள்  கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான்  போதைப் பொருள்   குற்றச்செயல் துடைத்தொழிப்புப் பிரிவின்   இயக்குனர்   கமிஷனர்   Khaw KoK chin   தெரிவித்தார்.  

அந்த  கும்பலின் முதுகெலும்பாக செயல்பட்ட  24 வயதுடைய ரசாயனத்துறையைச் சேர்ந்த   நபரும் கைது செய்யப்பட்டார்.  போதைப் பொருள்  தயாரிப்பு  மற்றும் அக்கும்பலின்  செயல் நடவடிக்கையில்  அவர் ஈடுபட்டுள்ளார். அந்த நபரின் மனைவியும் காதலியும் வீடு மற்றும்  ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பின் வாடகை மற்றும்  அந்த போதைப் பொருள் கும்பலுக்கான நிதி விவகாரங்களை  கவனித்து வந்ததாக  அவர்  கூறினார்.  

அந்த கும்பலின் இதர உறுப்பினர்கள்  விநியோகிப்பு  மற்றும் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் ஒரு ஆண்டு காலமாக  செயல் பட்டு வந்ததாக காஜாங் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்  கூட்டடத்தில்   Khaw  Kon  Chin   தெரிவித்தார். அவர்களிடமிருந்து  1.08 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் , 13 வாகனங்கள்  213, 000 ரிங்கிட்  ரொக்கம் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.   

செராஸ்காஜாங் நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றை நிறுத்தி பரிசோனை செய்தபோது  2.4 கிலோ  heroin பறிமுதல் செய்யப்பட்டதாகவும்  அனை தொடரந்து செமினியில் உள்ள வீட்டில்   7.31 கிலோ heroin  மற்றும்  4.5 கிலோ  ரசாயனமும்  பறிமுதல் செய்யப்பட்டது.   KL Sentralலில் உள்ள  ஆடம்பர அடுக்ககத்தில் ஷாபு, ஹெரோய்ன்  மற்றும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!