
பந்திங், ஜன 20 – சிலாங்கூர், பந்திங், Olak Lempit பகுதியில், கடையருகில் நிகழ்ந்த சண்டையில் , ஆடவர் ஒருவரை இறக்கும் வரை அடித்ததற்காக, 2 பாதுகாவலர்களைப் போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜன 11 -ஆம் தேதி , இரவு மணி 10.45-க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தின் போது, தாக்கப்பட்ட ஆடவர் போதைப் பொருள் விநியோகித்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்டது .
அதையடுத்து, அந்த செயலைக் கண்ட சிலர் 24 வயதான அந்த ஆடவரைப் பொருட்களைக் கொண்டு தாக்கியதாகவும், அச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பின்னர் போலிசுக்கு தகவல் கொடுத்ததாகவும் Kuala Langat மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Ridhwan Mohd Nor தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தாக்கப்பட்ட ஆடவர் வைத்திருந்த பையில் , 3.93 கிராம் எடையுள்ள ஷாபு போதைப் பொருளைக் கண்டெடுத்ததாகவும் அவர் கூறினார்.