
கிள்ளான், பிப் 17 – கிள்ளான், Bukit Tinggi, Ambang Botanic பகுதியில் , ஆடவர் ஒருவரை மோதி தள்ளிவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் , போலீசார் 2 ஆடவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேடப்படும் அந்த ஆடவர்கள் 33 வயது எஸ். சுந்தர், 24 வயது ஃபிலிப் அந்தோணி ( Philip Anthony ) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் அந்த இரு ஆடவர்களும், தாங்கள் ஓட்டு வந்த BMW காரால், வேண்டுமென்றே ஆடவர் ஒருவரை மோதி தள்ளி அவரை 40 மீட்டர் வரை இழுத்துச் சென்றதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் Cha Hoong Fong தெரிவித்தார்.
மோதித் தள்ளப்பட்ட ஆடவருக்கும் , தேடப்பட்ட இரு ஆடவர்களுக்கும் முன்னதாக , கடை ஒன்றில் வாக்குவாதம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இதனிடயே மோதித் தள்ளப்பட்ட அந்த ஆடவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.