
கோலாலம்பூர், செப் 12 – ஆடவர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒது பெண் உடபட மேலும் மூன்று சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். அந்த ஆடவரின் சடலம் சிலாங்கூர் , பூச்சோங்கில் கார் ஒன்றில் காணப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செராஸ் ஓ.சி.பிடி துணை கமிஷனர் சாம் ஹலீம் ஜமாலுடின் தெரிவித்தார். வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஆகக்கடைசியாக மூன்று சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். மேல் விசாரணைக்காக அவரகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் இம்மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட நால்வரை தடுத்துவைக்கும் உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சாம் ஹலீம் கூறினார். கடந்த புதன்கிழமையன்று பூச்சோங் , 14ஆவது மைலில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகே நிறுத்திவைக்கப்பட்ட புரோட்டோன் ஜென் Two காரிலிருந்து கொல்லப்பட்ட 26 வயது ஆடவரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது.