Latestமலேசியா

இந்தியர்களுக்கான புதிய அரசியல் கட்சி – வரலாறு தீர்மானிக்கட்டும்

கோலாலம்பூர், நவ 24 – இந்தியர்களுக்கான புதிய அரசியல் கட்சியின் வெற்றியை வரலாறுதான் தீர்மாணிக்க வேண்டும் என பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரான பேராசியரியர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உரிமை என பெயரில் புதிய அரசியல் கட்சியை கோலாலம்பூர் பிரிக்பீல்ஸில் அமைக்கவிருக்கும் அவர், தற்போதுள்ள இந்திய அரசியல் கட்சிகள் சமூகத்தை திறம்பட பிரதிநிதிக்க தவறிவிட்டதாக தமது முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பல இன அரசியல் கட்சிகள் என்று அழைக்கப்படுபவை சமூகத்தை திறமையாகவும் நேர்மையாகவும் பிரதிநிதிப்பதற்கு தவறிவிட்டன. சமூகத்திற்கு சுதந்திரமான மற்றும் உரிமைகளைப் பெறுவதில் தீவிரமான தலைவர்களைக் கொண்ட ஒரு கட்சி தேவையென பி.ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

பல இனக் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும் வரை, இந்திய ஆதரவு தேவைப்பட்டது. இந்தியர்கள் முக்கிய பதவிகளை வகிப்பதில்லை, ஒருவர் அல்லது இருவர் அத்தகைய பதவிகளை வகித்தாலும், அவர்கள் இந்தியரல்லாத தலைவர்களின் விருப்பப்படியே இருக்கிறார்கள்.

பொதுவாக, இந்தியத் தலைவர்களுக்கு இந்தியர் அல்லாத தலைவர்களிடம் மரியாதையோ கண்ணியமோ கிடைப்பதில்லை. இதை வைத்து, இந்திய சமூகம் அவர்களை எப்படி உயர்வாக மதிக்க முடியும். இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இப்போதைக்கு மாநில அல்லது கூட்டரசு நிலைகளில் மிகவும் அரிதாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன.

2024 பட்ஜெட்டில், RM130 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டது . உண்மையில் நாட்டிற்கு இந்திய சமூகத்தினர் ஆற்றியிருக்கும் பெரும் பங்கை கருத்தில் கொண்டு இந்திய சமூகத்திற்கு புதிய பட்ஜெட்டில் 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியர்களை சம உரிமையில் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் .

ஒரு புதிய அரசியல் கட்சி சமூகத்தை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அத்தகைய ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் தோற்றம் இந்திய பிரதிநிதித்துவத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். புதிய வடிவிலான பிரதிநிதித்துவம் வெற்றி பெறுகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பதை வராறுத்தான் நிர்ணயிக்கும் என ராமசாமி தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!