
ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐவரை கைது செய்த குடிநுழைவு அதிகாரிகள் 12 இந்தியப் பிரஜைகளை மீட்டனர். சரவாக்கில் ஆள்கடத்தல் கும்பலுக்கு எதிராக மேற்கொள்ளப்பபட்ட பல்வேறு நடவடிக்கையில் அந்த இந்தியப் பிரஜைகள் மீட்கப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Ruslin Jusoh தெரிவித்தார். அந்த ஆள்கடத்தல் கும்பலின் முதுகெலும்பாக செயல்பட்ட 40 வயதுடைய Dudley என்ற உள்நாட்டு ஆடவரும் கைது செய்யப்பட்டார். அதோடு அக்கும்பலைச் சேர் ந்த 25 முதல் 40 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் Ruslin கூறினார்.
ஆள்கடத்தல் கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட 12 பேரும் ஆடவர்களாவர். மலேசியாவில் நுழைவதற்கு 20,000 ரிங்கிட் மற்றும் 25,000 ரிங்கிட்வரை அவர்கள் செலுத்தியிருப்பதும் முன்னோடி விசாரணை மூலம் தெரிய வருவதாக Ruslin Jusoh வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.