Latestமலேசியா

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கொலை தொடர்பான ஆதாரங்களை போலீசார் திரட்டுகின்றனர்.

கோலாலம்பூர், டிச 8 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன்
ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் படுகொலை தொடர்பான ஆதாரங்களை திரட்டும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தி வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமார் கான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான நடவடிக்கை இன்னமும் நடைபெற்று வருவதால் கிடைக்கப்பெறும் அனைத்து தகவல்களும் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.

எங்களிடம் தற்போது இருக்கும் ஆதாரங்களை நாங்கள் திரட்டியிருக்கிறோம். இந்த விவகாரங்களை குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஷுஹைலி முகமட் ஜைன் வெளியிடுவார் என்றும் ஹுசைன் உமார் தெரிவித்தார்.

அச்சிறுவனின் கொலை தொடர்பாக சிலாங்கூர் போலீஸ் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றையும் அமைத்திருப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!