Latest
ஆணுறுப்பை காட்டிய ஆடவன் நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பு

கெடா,பிப் 6 – யானில், இரு பெண்களிடம், ஆணுறுப்பை காட்டி ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவன், விசாரணைக்கு உதவும் பொருட்டு நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
இன்று தொடங்கி இம்மாதம் ஒன்பதாம் தேதி வரை, அவனை தடுத்து வைக்க, யான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக யான் போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் ஷானால் அக்தார் ஹஜி தெரிவித்தார்.
நேற்று காலை மணி 11.30 வாக்கில், சமையல் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 27 வயது நூர் வாஹிடா அஹ்மட் மற்றும் அவரது உறவுக்கார பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த அவ்வாடவன் ஆணுறுப்பை காட்டி ஆபாசமாக நடந்து கொண்டுள்ளான்.
அச்சம்வத்தால் பதற்றம் அடைந்த அவ்விரு பெண்களும் போலீஸ் புகார் செய்ததை அடுத்து, மாலை மணி 5.45 வாக்கில் அந்த 26 வயது ஆடவன் கைதானான்.