Latestமலேசியா

PSC கட்டண உயர்வுக்கு முன் வாங்கப்படும் டிக்கெட்டுகளின் விலையில் மாற்றமில்லை; Batik Air உத்தரவாதம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்-13, புதியப் பயணிகள் சேவைக் கட்டணம் (PSC) ஜூன் 1 முதல் அமலுக்கு வருவதற்கு முன் வாங்கப்படும் டிக்கெட்டுகள், நடப்பு கட்டண விகிதத்திலேயே இருக்கும் என Batik Air பயணிகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகான பயணமாக இருந்தாலும், நடப்பு விலை பொருந்தும் என அவ்விமான நிறுவனம் விளக்கியது.

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (Mavcom) செவ்வாய்கிழமை PSC வரி அதிகரிப்பை அறிவித்த நிலையில், Batik Air அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

Mavcom-மின் அறிவிப்பின் படி, KLIA Terminal 1-னிலிருந்து அனைத்துலகப் புறப்பாடுகள் இனி 73 ரிங்கிட் PSC கட்டணத்தை உட்படுத்தியிருக்கும்.

அதே KLIA Terminal 2-இல் இருப்பவர்களுக்கு 50 ரிங்கிட் PSC கட்டணம் விதிக்கப்படும்.

தற்போது, ​​KLIA Terminal 1 அல்லது Terminal 2-விலிருந்து ஆசியான் நாடுகளுக்குப் புறப்படும் விமானங்களுக்கான PSC கட்டணம் 35 ரிங்கிட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், செனாய் அனைத்துலக விமான நிலையத்தைத் தவிர மற்ற அனைத்து விமான நிலையங்களுக்குமான உள்நாட்டுப் புறப்பாடுகளுக்கு, PSC கட்டணம் 11 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில் விமான நிலைய உள்கட்டமைப்பை தொடர்ந்து விரிவாக்குவதற்கு இந்த PSC கட்டண உயர்வு அவசியமாவதாக Batik Air நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Chandran Rama Muthy சொன்னார்.

“கட்டண அதிகரிப்புக்கு ஏற்ற அளவுக்கு KLIA-வில் வசதிகளின் தரமும் உயரும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக நெரிசல் பிரச்னைக்குத் தீர்வுப் பிறக்க வேண்டும் ” என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!