
சென்னை, பிப் 1 – தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி , ஆண் குழந்தைக்கு அப்பாவாகியிருக்கிறார்.
சீரியல் நடிகை கிருஷ்ண ப்ரியாவைக் காதலித்து கடந்த 2014-இல் திருமணம் செய்து கொண்ட அட்லி, திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தாங்கள் ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியிருக்கும் மகிழ்ச்சியினை அவர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் மூலமாக பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ பட வேலைகளில் பரபரப்பாக உள்ளார்.