
சான் ஜோஸ் , ஜூன் 8 – கோஸ்டா ரிக்காவில் 16 ஆண்டு காலமாக தனியே மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் முதலை ஆண் துணையின்றி கார்பமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு மீன், பள்ளி மற்றும் பாம்புகள் ஆண் துணையின்றி இனச்சேர்க்கை செய்ததாக பதிவாகியுள்ளது. ஆனால் வரலாற்றிலே ஊர்வன வகையான முதலை கர்பமடைந்தது இதுவே முதன் முறையென ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த பெண் முதைலையை பரிசோதித்த போது அதன் ஒரு முட்டையில் கரு முழுமையாக உருவாகியுள்ளதாக தெரிவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, இந்த முதலை டைனோசர்களின் பரிணாமத்தை கொண்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என , உயிரியல் ஆய்வு தலவல் வெளியிட்டுள்ளது