Latestமலேசியா

ஆதரவற்றவர்களுக்கு ரமலான் மாதத்தில் உணவு வழங்காதீர் – கோலாலம்பூர் மாநகர் மன்றம்

கோலாலம்பூர், ஏப்ரல் 10 – அரசு சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் தனியார் நபர்களும், கோலாலம்பூரில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு இந்த ரமலான் மாததில் உணவு பொட்டலங்களை வழங்க வேண்டாம் கோலாலம்பூர் மாநகர் மன்றம் கூறியுள்ளது.

கோவிட்-19 தொற்று பரவுவதை தடுக்கவும், உணவு விரயம் மற்றும் தூய்மை கேட்டை தடுக்கவும் இவ்வாறு வலியுறுத்தப்படுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இவ்வாறு உணவு பொட்டலங்கள் வழங்கப்படும்போது, மாநகரின் சில முக்கிய இடங்களில் கூட்டம் குவிகிறது, இது அங்குள்ள வியாபாரிகளுக்கு தொந்தரவான சூழலை உண்டாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், உணவு பொட்டலங்களை வழங்க நினைப்பவர்கள், கோலாலம்பூரில் உள்ள இரண்டு முக்கிய ஆதரவற்றோர் பாதுகாப்பு மையங்களில் உணவுகளை வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!