
அமராவதி , ஏப் 14 – ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்ததோடு பலர் காயம் அடைந்தனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் Vangalapudi Anita தெரிவித்திருக்கிறார்.
பட்டாசுகளைத் தயாரிப்பதற்காக ரசாயனங்கள் கலக்கப்பட்டபோது ஏற்பட்ட வெடிப்பு, பெரும் தீயை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. வெடிப்பு மிகவும் வலுவாக இருந்ததால் ,அந்த தொழிற்சாலையின் செங்கல் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்தது.
ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதோடு , மேலும் பலர் காயங்களுடன் உயிர்தப்பியதாக போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிகிறது. கிராமவாசிகள் , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து போலீஸ்காரர்களும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை வெளியே மீட்டனர்.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும், இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யும்படி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணனுக்கு முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.