Latestமலேசியா

ஆபத்தான முறையில் ஏற்றப்பட்ட கார்கள் ; லாரி ஓட்டுநருக்கு அபராதம்

ஈப்போ, பிப் 15 – போலீஸ் ரோந்து கார்களை, ஆபத்தான முறையில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கொண்டு சென்ற லாரி ஒன்றின் ஓட்டுனருக்கு , 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதன் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்த லாரி ஒட்டுநர் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக, தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

மேலும், அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த 8 போலீஸ் ரோந்து கார்கள் ஏலத்தில் விற்கப்பட்டிருந்ததாகவும் அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!