கோலாலம்பூர், பிப் 12 – சப் கோ மிங் உட்பட பெருநாள் காலங்களில் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வெடிகளைக் கொண்ட பட்டாசுகளுடன் விளையாடுவதை தவிர்க்கும்படி பொதுமக்களை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் கேட்டுக்கொண்டார். அதோடு பெர்மிட் இல்லாமல் பட்டாசுகளை எவராவது விற்பனை செய்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேற்போகாத சிறை அல்லது 100 ரிங்கிட்வரை அபராதம் மற்றும் அவையிரண்டும் விதிக்கப்படும் வகையில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று அப்துல் ஜாலில் ஹசான் நினைவுறுத்தினார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago