புதுடில்லி, பிப் 22 – ஆபத்தின் விளைவை உணராமல் கருமமே கண்ணாக ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியின் வெளிப்புற பகுதியில் நடுத்தர மாது ஒருவர் கண்ணாடி ஜன்னலை துடைத்துக்கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தலங்களில் பகிரப்படுகிறது.
Ghaziabad ட்டில் தமது கணவர் முகமட் சலிமுடன் குடியிருக்கும் ஷஹிடால் என்ற அந்த பெண் சிறிதுகூட அச்சமன்றி சிறுமுற்றத்தில் இருந்தவாறு தமது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை துடைத்துக்கொண்டிருக்கிறார்.
சிறிது தடுமாறினால்கூட அவர் கீழே விழும் சூழ்நிலைக்கு உள்ளாகக்கூடும். அவ்வீட்டிற்கு எதிரேயுள்ள மற்றொரு குடியிருப்புவாசியான சுருதி தக்கூர் எடுத்த அந்த காணொளி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரங்கமாக பரவப்பட்டு வருகிறது. இந்த காணொளியை கண்ட பலர் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் வகையில் அந்த பெண்மணியின் செயல்பாடு இருப்பதாக குறைகூறினர்.