கோலாலம்பூர், டிசம்பர்-18, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவலாக விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது.
50 ரிங்கிட் முதல் 350 ரிங்கிட் வரையிலும் அவை விற்கப்படுகின்றன.
30,000 உறுப்பினர்கள் இருக்கும் முதன்மைக் குழுவில் இணைந்தோ அல்லது ஆயுட்கால உறுப்பினர் அந்தஸ்தில் வெறும் ஒரு சிலர் மட்டுமே இருக்கும் பிரத்தியேக குழுக்களில் சேர்ந்தோ வீடியோக்களை வாங்க முடியும்.
வசதியில்லாதவர்களுக்கு மிகக் குறைந்த விலையாக 1 ரிங்கிட்டில் வீடியோ விற்கப்படுகிறது; போதாக்குறைக்கு QR கட்டண வசதியும் உண்டு.
இவ்வேளையில் ஆபாசப் படங்களில், ஏராளமான சிறார்கள் அச்செயலுக்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
தங்களுக்கு நடப்பதை அவர்கள் தடுக்கவில்லை என்றாலும், ஒரு தர்மசங்கடம் அவர்களை ஆட்கொண்டுள்ளது; பலரின் கண்களில் வெளிப்படையாக பயத்தைக் காண முடிகிறது.
அதிலும் கொடுமை என்னவென்றால், பல சிறார்கள் தலைசுற்றலுக்கு ஆளான நிலையிலும் தூங்கி விழும் நிலையிலும் ஆபாசச் செயல்களுக்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அச்சிறார்கள் மலேசியர்களா என்பதை உறுதிபடுத்த இயலவில்லை; என்றாலும் அதில் ஓர் ஆடவர் பேசுவது மலேசிய சீன வட்டார வழக்குப் போல் இருக்கிறது.
இந்த ‘இருண்ட’ சிறார் ஆபாச படத் தயாரிப்பு உலகம் தொடர்பான தகவல்கள் NST மேற்கொண்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.