
பாங்கி, நவ 18 – ‘ஆபாசமாக பேசுவதுபோல உள்ள காணொளியில் இருப்பது நான், ஆனால் அது எனது குரல் அல்ல’ என்று கூறியுள்ளார் J-KOM எனப்படும் சமூக தொடர்புத் துறையின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் ஆகுஸ் யூசோப்.
அண்மையில் Agus போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், ‘வஹாப்’ (“Wahab”) எனும் நபரோடு பாலியல் ஆபாச உரையாடலில் ஈடுபட்டிருந்து போல காணொளி ஒன்று வைரலாகி இருந்தது.
அந்தக் காணொளி உண்மையானது என்றாலும், அத்துறையில் வேலை செய்யும் ‘மிஸ்டர் H’ என்பவரால் வெட்டி ஒட்டப்பட்டு குரல் பதிவும் சேர்க்கப்பட்டிருப்பட்தாக ஆகுஸ் நேற்று இரவு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ட்திருக்கிறார்.
அக்காணொளியில் இருந்ததாக சொல்லப்படும் ‘வஹாப்’ என்பவரும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தானும் “வஹாப்”-உம் தந்தை மகன் என்ற அளவிலே பேசிய அந்த காணொளி இவ்வாறு திரித்து வெளியிடப்படும் என தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என ஆகுஸ் கூறினார். இது தொடர்பில் தாம் போலிஸ் புகார் செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, J-KOM தலைமைச் செயலாளர் ஆகுஸ் ராஜினாமா செய்திருப்பதை உறுதி படுத்திய தகவல் மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாமி பாட்சில், ஆகுஸின் இடத்தை வேறு ஒருவர் விரைவில் நிரப்புவார் என்றும் கூறினார்.