உலு சிலாங்கூர், மே 10 – கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான பெரிக்காத்தான் நேஷனலின் வேட்பாளர் கைருல் அசாரி, சமீபத்தில் ஆபாச நடிகையுடன் இருக்கும் காணொளி பரவியிருப்பது ஒரு அரசியல் தாக்குதல் என விவரித்தார் அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்.
கோலா குபு பாரு மாநில சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இப்போது 48 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், அக்காணொளி ஒரு வதந்தி என தெரிவித்தார்.
முன்னதாக, ஒரு நிமிடம் 12 வினாடிகள் கொண்ட குறுகிய வீடியோ ஒன்றில், கைருல் அஸ்ஹாரியின் தனிப்பட்ட சமூக ஊடகப் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்கள் இருந்தன.
அதில் ஆபாச நடிகையின் சமூக கணக்கைப் பின்தொடர்வது காண்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.