Latestமலேசியா

ஆபாச படத்தை அனுப்பிய ஆடவனுக்குப் பத்தாயிரம் ரிங்கிட் அபராதம்

குவாலா கங்சார் , ஜன 19 – மூன்றாண்டுகளுக்கு முன், பெண் ஒருவருக்கு ஆபாசமான புகைப்படத்தை அனுப்பிய ஆடவனுக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து, பேராக், குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்பளித்தது.

தவறான நோக்கத்தில் அந்த புகைப்படத்தை அனுப்பியதை 28 வயது முஹமட் அஸ்ராப் அஹ்மட் சுஹைமி எனும் அந்த ஆடவன் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

2020-ஆம் ஆண்டு, ஜனவரி எட்டாம் தேதி, அதிகாலை மணி 1.57 வாக்கில், Telegram சமூக ஊடகம் வாயிலாக அந்த ஆடவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.

அந்த புகைப்படத்தை மறுநாள் காலை மணி பத்து வாக்கில் பார்த்த சம்பந்தப்பட்ட பெண் உடனடியாக போலீஸ் புகார் செய்ததை அடுத்து, அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி இரவு மணி 11 வாக்கில், தொடர்பு பல்லூடக ஆணைய அதிகாரிகளின் உதவியோடு போலீஸ் அவனை கைது செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!