
காபுல் , ஜன 12 – ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் ஐவர் பலியாகினர். காபுலில் வெளியுறவு அமைச்சுக்கு அருகே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த சம்பவத்தில் மேலும் பலர் காயம் அடைந்தததாக காபுல் போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சீனப் பேராளர் குழு ஒன்று ஆப்கான் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த வேளையில் தற்கொலை படையைச் சேர்ந்த ஆடவன் அந்த தாக்குதலை நடத்தியுள்ளான்.