
ஆப்கானிஸ்தானில், வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட முதல் “சூப்பர் காரை” அந்நாட்டு தலிபான் அரசாங்கம் வெளியிட்டது.
ஆப்கானிஸ்தான் தொழில்நுட்ப தொழில்கல்வி நிறுவனமான ATVI-யின் ஐந்தாண்டுகால திட்டம் அதுவாகும்.
எனினும், MADA 9 எனும் அக்காரின் செயல்திறன் குறித்த தரவு எதுவும் வெளியிடப்படாததால், சாலையில் செயல்படும் அதன் திறன் குறித்து உறுதிச் செய்ய முடியவில்லை.
MADA 9 சூப்பர் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கு இயந்திரம் Toyota Corolla ரக வாகனங்களில் உள்ள இயந்திரத்தை போலவே உள்ளதால், Bugatti, McLaren போன்ற கார்களுடன் அதனால் போட்டியிட முடியாமல் போகலாம். எனினும், வேகத்தை அதிகரிக்கும் வகையில் அந்த இயந்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அந்த சூப்பர் காரின் புகைப்படங்களை சமூக ஊடகங்களின் பகிர்ந்துள்ள தலிபான் பேச்சாளர் ஒருவர், அது நாட்டின் பெருமைக்குரிய சின்னம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.