Latestஉலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துடிக்கும் மக்கள்; கடப்பிதழை விண்ணப்பிக்க அலைமோதும் கூட்டம்

காபுல், டிச 20- வெளிநாடுகளுக்கான பயணத் தடை அகற்றப்பட்டதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான மக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது பயணக் கடப்பிதழ்களை விண்ணப்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்குப் போடப்பட்ட தடையை அண்மையில் தலிபான் அரசாங்கம் மீட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரில் மக்கள் கூட்டங் கூட்டமாக பல மணி நேரம் காத்திருந்து பயணக் கடப்பிதழை விண்ணப்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர். தலிபான் ஆட்சியின் கொடுமையைத் தாள முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறுவதே சிறந்த தேர்வு எனும் நிலைக்கு சிலர் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!