காபுல், பிப் 18 – அண்மையில் மொரோக்கோவில் ஆள்துளை கிணற்றுக்குள் விழுந்த ராயன் என்ற சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போன சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் , ஆள்துளைக் கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் சிக்கியிருக்கும் மேலுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
33 அடி ஆழமுள்ள ஆள்துளைக் கிணற்றுக்குள் விழுந்து இரு நாட்கள் ஆகி விட்ட நிலையில், ஹெய்டர் எனும் அந்த சிறுவனில் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், சுரங்கப் பாதையை தோண்டி அவனை மீட்கும் முயற்சிகளை மீட்பு படையினர் துரிதப்படுத்தப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில், “அழாதே என்னுடன் பேசு , உன்னை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்” என தந்தை கூறும் வேளை , “ சரி நான் பேசிக் கொண்டே இருக்கிறேன்” என ஹெய்டர் பதில் சொல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.