கோலாலம்பூர், பிப் 21 – ஆப்கானிஸ்தானில் அலுவலகத்தை திறப்பதற்கு மலேசியா அரசாங்கம் திட்டமிடவில்லை என வெளியுறவு அமைச்சு அறிவித்தது. ஆப்கானிஸ்தான் மீதான வெளியுறவு அமைச்சின் சிறப்பு ஆலோசகர் Ahmad Azan Abdul Rahman னை ஆப்கானிஸ்தான் இடைக்கால வெளியுறவு அமைச்சர் Abdul Qahar Balkhi சந்தித்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளரான Abdul Qahar Balkhi டுவிட் செய்துள்ளார்.
மலேசியாவின் உதவிப் பொருட்களுடன் விமானம் ஒன்று புதன்கிழமையன்று காபுல் வந்தடையும் என்றும் அவர் தெரிவித்தார். உதவிப் பொருள்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்களை நிர்வகிப்பதற்காக காபுலில் அலுவலகம் ஒன்று திறக்கப்படும் என்றும் Abdul Qahar Balkhi தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பாக மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. ஆக்கானிஸ்தானுக்கான முதலாவது உதவிப் பொருள் நாளை சுபாங்கிலிருந்து புறப்படவுள்ளது.