லாகூர், பிப் 16 – ஆப்கானிஸ்தானுக்கு தனது பிரதேசத்தின் மூலமாக 50,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா கொண்டுச் செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாதத்திலிருந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த இரண்டு அண்டை நாடுகளுக்கிடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டிருந்ததால் தனது நாட்டின் பிரதேசத்தின் மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு உதவிப் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு இந்தியாவுக்கு இதற்கு முன் பாகிஸ்தான் அனுமதி வழங்காமல் இருந்தது.