
அலோர் ஸ்டார், செப்டம்பர் -5, சில மாதங்களுக்கு முன் தாம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் முதன் முறையாக உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய மனைவி ஒரு போலீஸ்காரர்.
அவரை, எனது முதல் மனைவியே முன்னின்று பெண் பார்க்கச் சென்றதாக சனுசி சொன்னார்.
திருமணத்தில் முதல் மனைவியும் பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.
அது சட்டத்திற்குட்பட்ட திருமணமே.
எனவே இது சர்ச்சையாக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என சனுசி கூறினார்.
தம் மீதும் குடும்பத்தார் மீதும் மேலும் அவதூறுகள் பரப்பப்படுவதைத் தவிர்க்க, தனது தனிப்பட்ட விஷயமான இரண்டாவது திருமணத்தை பகிரங்கப்படுத்த முடிவுச் செய்ததாக அவர் சொன்னார்.
தேவையற்ற விளம்பரம் கிடைத்து விஷயம் பெரிதாவதைத் தவிர்க்கவே, இது நாள் வரை அவ்விஷயத்தில் தாம் மௌனம் காத்து வந்ததாக சனுசி மேலும் கூறினார்.