Latestஉலகம்

ஆம்புலன்ஸ் வண்டியின் கதவு செயல் இழந்தது; காயம் அடைந்தவர் வெளியேற முடியாமல் மரணம்

கொச்சின், ஆக 31 – கேராளாவில் விபத்தில் காயம் அடைந்த 66 வயதுடைய ஆடவரை அரசாங்க மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டியின் கதவு செயல் இழந்ததால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடியாத காரணத்தினால் அவர் மரணம் அடைந்தார். அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் கதவு திறக்க முடியாமல் செயல் இழந்ததால் அரை மணி நேரத்திற்கு மேலாகியும் அதனை திறக்க முடியவில்லை. அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் ஓட்டுனரும் அவரது உதவியாளரும் கதவை திறப்பதற்காக நீண்ட நேரம் போராடியும் அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அங்கு திரண்ட மக்களில் சிலர் ஆம்புலன்ஸ் வண்டியின் கண்ணாடியை உடைத்து அதன் உள்ளே சென்று கதவை திறந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரைணை நடத்துவதற்கு கேரளா சுகாதார அமைச்சர் வீனா ஜோர்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!