மஞ்சோங், ஆகஸ்ட் -31, பேராக், ஆயர் தாவார் அருகே மர ஆலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் சரிந்து மேலே விழுந்ததில், ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை 11 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மரணமடைந்தவர், அந்த மர ஆலையில் கட்டைகளை ஏற்றிச் செல்லும் 41 வயது லாரி ஓட்டுநர் என தெரிவிக்கப்பட்டது.
முதலாளியின் கண்முன்னே பெரும் சத்தத்துடன் கட்டைகள் சரிந்து விழுந்திருக்கின்றன.
கட்டைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டவரை ஒருவழியாக வெளியே கொண்டு வந்த போதும், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து திடீர் மரணமாக அதனைப் போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.