Latest

ஆயிரம் ரிங்கிட் ‘பார்க்கிங்’ அபராதமா ? வாகனமோட்டிகள் சினம்

காரை தவறாக நிறுத்திய குற்றத்திற்காக, கிள்ளான் நகராண்மைக் கழகம், ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது, சுமார் 30 வாகனனோட்டிகளை சினமடையச் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

தாமான் எங் ஆன் பகுதியிலுள்ள, பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற பிள்ளைகளின் தேக்குவாண்டோ போட்டியை காண சென்ற பெற்றோர்கள் பலர் அந்த அபராதத்தை பெற்றதாக கூறப்படுகிறது. மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு, ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த அபராதத்தை கிள்ளான் நகராண்மைக் கழகம் உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டுமெனவும் வாகன உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதனிடையே, அவ்விவகாரம் தொடர்பில் கிள்ளான் நகராண்மைக் கழகத்திடம் விளக்கம் கோரப்படுமென, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!