Latestமலேசியா

ஆயுதக் கொள்ளையில் தொடர்புள்ள முன்னாள் போலீஸ்காரர் தடுத்து வைப்பு

மலாக்கா, மே 3 – மலாக்கா Taman Bukit Cheng கில் நடைபெற்ற ஆயுதக் கொள்ளையில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் முன்னாள் போலீஸ்காரர் ஒருவரை தடுத்துவைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த 35 வயது சந்தேகப் பேர்வழியை 7 நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு மாஜிஸ்திரேட் Sharda Shienha Mohd Suleiman உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று பின்னிரவு மணி 12.05 அளவில் காய்கறி விற்பனையாளர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் 400 ரிங்கிட் ரொக்கம் கொள்ளையடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் முன்னாள் போலீஸ்காரரும் அடங்குவார் என மலாக்கா தெங்கா OCPD துணை கமிஷனர் Christoper Patit தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!